Tamil Kavithai Collection


Tamil

மெத்த படித்த மேதை:

அனைத்தும் அறிந்தவன் ஆண்டவன்!
– என்ன ஒரு முதலாளித்துவம் என்று எண்ணினேன்
உன் ராசி, நட்சத்திரம் சொல்லி அறிமுகப் படுத்திக்கொள் என்றான்!
– அங்கே விழுந்தது பகுத்தறிவின் முதல் விதை!

காற்றும் இல்லை; கறுப்பும் இல்லை;
பேயும் இல்லை; பிசாசும் இல்லை – என்று உரக்க கூவினான் படித்த மேதை!
சுடுகாடுக்கு மிக அருகில் ஒரு flat என்றதும் – தலை தெறிக்க ஓடினான்!

எதிர்காலத்தை கணிக்க வல்ல சத்தி என்னிடம் உள்ளது என்றேன்!
– எங்கே நாளை Share market results என்ன என்பதை கொஞ்சம் சொல் பார்க்கலாம் என்றான்!

என்னால் தண்ணீரில் நடக்க முடியும் என்றேன்! – கட்டுக்கதை என்றான்!
நடந்தேன் – Illusion என்றான்!
அவனோடு நடந்தேன் – Sorcery என்றான்!
அவனை மட்டும் நடக்க வைத்தேன் – தானே கடவுள் என்றான்!

வலி:

பணி நிமித்தமாக இடம் விட்டு இடம் பெயர்ந்தவன் சொன்னான்
– தான் உணர்வதாக புலம் பெயர்ந்தவனின் வலியை!

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவனை கோழை என்றான்!
அதைேயே கதையாக எழுதி வாசித்த போது காவியம் என்றான்!

பாசமம் பற்று அறுத்து பாரிக்கும் நிலையே – Zen!
எதுவும் புரியாமல் விரக்தியாய் சிரித்தான் ஒரு முகநூல் பேதை!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மூதுரை!
புறவாழ்வின் எடை முகநூலில் தான் தெரியும் என்றான் முகநூல் சித்தன்!

Advertisements